Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவது எப்படி?

மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவது எப்படி?

மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவது எப்படி?

மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவது எப்படி?

ADDED : ஜூலை 01, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
''தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற என்ன செய்ய வேண்டும்'' என்பது குறித்து அறிவிப்பு பலகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்புற வளாகத்தில், நுழைவு வாயில் அருகே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் நீங்கள் இணைவது எப்படி, காப்பீடு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வது எப்படி, பயனாளி ஆக வேண்டுமா, என்னென்ன தகுதி தேவை?

அனுமதி பெற சான்றிதழ் எவை, எந்தெந்த மருத்துவமனையில் காப்பீடு திட்டம் இருக்கிறது, என்ன சிகிச்சை பெற முடியும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை என்ன, 'ஸ்மார்ட் கார்டு' தொலைந்து விட்டால் நகல் எடுக்க முடியுமா என்பன உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் காப்பீடு திட்ட அலுவலக முதல்தளத்தில் அறை எண், 101ல் செயல்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய கார்டு வாங்க வருவோர், சிகிச்சைக்கு வரும் போது இடம் தெரியாமல்தேடி அலையும் நிலை இருந்தது.

இதனால்,இந்த அறிவிப்பு வைக் கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பயனளிப்பதாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us