Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஞ்சபூதக்கூட்டு... ஊறு வராமல் காட்டு

பஞ்சபூதக்கூட்டு... ஊறு வராமல் காட்டு

பஞ்சபூதக்கூட்டு... ஊறு வராமல் காட்டு

பஞ்சபூதக்கூட்டு... ஊறு வராமல் காட்டு

ADDED : ஜூன் 30, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
கடந்த 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகள், நிறுவனங்கள் என, அனைத்து இடங்களிலும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஏராளாமானோர் பங்கேற்றனர்.யோகா செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து விளக்கிய யோகா பயிற்சியாளர்கள், மூச்சுப்பயிற்சி மற்றும் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். இதன் மூலம், யோகாவை அறிந்து கொண்டவர்கள் ஏராளம்; ஆனால், கற்றுக்கொண்டவர்கள் சொற்பம் தான்.

''யோகா குறித்த விழிப்புணர்வு என்பது, அதை செயல்முறையாக மேற்கொள்வதுதான். அப்போதுதான், அதன் உண்மைத்தன்மையையும், அதன் முக்கியத்துவத்தையும் உணர முடியும். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று பஞ்சபூதங்களின் கூட்டாகத்தான் நம் உடல் உள்ளது. இவற்றில் உள்ள ஊறுகளைக் களைய யோகா கைகொடுக்கிறது. உடல் - மனச் செழுமைக்கும், ஆன்மாவை உணரவும் இது வாய்ப்பாக இருக்கும்'' என்கின்றனர் யோகா பயிற்சியாளர்கள்.

பெண்கள் ஆர்வம்

தற்போதைய சூழலில், யோகா பயிற்சி பெற, பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். வீடுகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டே பணி செய்வதால் பலருக்கும் மூட்டு, கால் வலி ஏற்படுகிறது; இதற்கு, யோகா வாயிலாக நிவாரணம் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். சர்வதேச யோகா தினம் என்பதும், யோக கலை மற்றும் பயிற்சியின் மீது ஆர்வமும், நம்பிக்கையும் ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறது.- சத்யா, யோகா பயிற்சியாளர், திருப்பூர்.

-

அதிகாலை எழலாம்

சிலம்பம் கற்கும் மாணவ, மாணவியர் பயிற்சிக்கு முன், யோக கலையின் ஒரு அங்கமான மூச்சுப்பயிற்சி செய்கின்றனர். சர்வதேச யோகா தினம் என்பது, யோக கலையின் முக்கியத்துவம், அவசியத்தை மக்களிடம் உணர செய்திருக்கிறது. பிற விளையாட்டுகள் போன்று, மாநில, தேசிய, சர்வதேச அளவில் யோகாவும் இடம் பெற்றிருக்கிறது; பலர் உலகளவிலும் சாதனை படைக்கின்றனர். குறிப்பாக, யோகா பயிற்சி என்பது, அதிகாலையில் செய்வது நல்லது என்பதால், பலருக்கும் அதிகாலை எழும் பழக்கம் வந்திருக்கிறது.- கிருஷ்ணன், பயிற்சியாளர்முத்தமிழ் சிலம்பம், கோல்டன் நகர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us