Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சார்பதிவாளர் ஆபீசில் முறைகேடு விவசாயிகள் சங்கம் புகார் மனு

சார்பதிவாளர் ஆபீசில் முறைகேடு விவசாயிகள் சங்கம் புகார் மனு

சார்பதிவாளர் ஆபீசில் முறைகேடு விவசாயிகள் சங்கம் புகார் மனு

சார்பதிவாளர் ஆபீசில் முறைகேடு விவசாயிகள் சங்கம் புகார் மனு

ADDED : ஜூலை 27, 2024 12:53 AM


Google News
உடுமலை;கணியூர் சார்பதிவாளர் அலுவலக முறைகேடுகள் குறித்து, விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட பதிவாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட பதிவாளரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது:

மடத்துக்குளம் தாலுகா கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும், விவசாயிகள், பொதுமக்களிடம் புரோக்கர்கள் வாயிலாக, ஆவணத்தில் குறை உள்ளது என கூறி, சொத்து மதிப்புக்கு ஏற்ப, லஞ்சம் பெறப்படுகிறது.

மேலும், போலி ஆவணங்கள், நபர்கள் வாயிலாக, முறைகேடாக ஆவணப்பதிவு செய்து, சொத்துக்கள் அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இது போல், ஏராளமானவர்களை மிரட்டி, 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது, குறித்து பட்டியல் வழங்கியுள்ளோம். இது குறித்து, கணியூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வரும், 30ல் கணியூர் சார்பதிவாளர் அலுவலக முறைகேட்டைக்கண்டித்து, அலுவலத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த, விவசாயிகள் சங்கம், பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு,அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us