ADDED : ஆக 03, 2024 05:43 AM
உடுமலை: மழை பரவலாக பெய்து வருவதால், மானாவாரி விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பருவமழை சீசனில், மானாவாரியாக சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இந்தாண்டு, தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியது; இதனால், கால்நடை தீவன தேவைக்காக சோளம் உள்ளிட்ட சாகுபடி விதைப்பு மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது விளைநிலங்களில் ஈரப்பதம் இருப்பதால், மானாவாரி சாகுபடி விதைப்புக்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 'மழை நீடித்தால், இந்த சீசனில் விதைப்பு செய்வோம். இல்லாவிட்டால் வடகிழக்கு பருவமழையின் போதே விதைப்பு செய்ய முடியும்,' என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.