/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரோபோடிக் மூட்டு மாற்று ஆபரேஷன் பாலா மருத்துவமனையில் வெற்றிகரம் ரோபோடிக் மூட்டு மாற்று ஆபரேஷன் பாலா மருத்துவமனையில் வெற்றிகரம்
ரோபோடிக் மூட்டு மாற்று ஆபரேஷன் பாலா மருத்துவமனையில் வெற்றிகரம்
ரோபோடிக் மூட்டு மாற்று ஆபரேஷன் பாலா மருத்துவமனையில் வெற்றிகரம்
ரோபோடிக் மூட்டு மாற்று ஆபரேஷன் பாலா மருத்துவமனையில் வெற்றிகரம்
ADDED : ஜூலை 14, 2024 11:18 PM

திருப்பூர்;திருப்பூரில் உள்ள பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் கடந்த 14 நாளில் 10 பேருக்கு ரோபோடிக் மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.
திருப்பூர், தாராபுரம் ரோடு அரசு மருத்துவக்கல்லுாரி எதிரில், பி.கே.எம்.ஆர்., நகரில், பாலா ஆர்த்தோ மருத்துவமனை செயல்படுகிறது. திருப்பூரிலேயே முதன்முறையாக இங்கு கடந்த 1ம் தேதி ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவு துவங்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''கடந்த 14 நாட்களில், 10 பேருக்கு ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள், மறுநாளே நடக்க முடிந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய தொழில்நுட்பம் மூலம் உருவான ரோபாடிக் மூலம், துல்லியமாக மூட்டு மறுசீரமைப்பை மேற்கொள்ள இயலும். மருத்துவமனையில், வரும் அக்., 31 வரை அறுவை சிகிச்சைகள் 50 சதவீத சலுகைக்கட்டணத்தில் மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடு மற்றும் அனைத்து தனியார் காப்பீடு திட்டங்களின் கீழ் கட்டணமில்லா சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்'' என்றார்.