/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வயநாடுக்கு உதவிக்கரம் நீட்டிய 'சிகரம்' வயநாடுக்கு உதவிக்கரம் நீட்டிய 'சிகரம்'
வயநாடுக்கு உதவிக்கரம் நீட்டிய 'சிகரம்'
வயநாடுக்கு உதவிக்கரம் நீட்டிய 'சிகரம்'
வயநாடுக்கு உதவிக்கரம் நீட்டிய 'சிகரம்'
ADDED : ஆக 03, 2024 06:28 AM
திருப்பூர்: கேரளா வயநாடு வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு, சிகரம் பவுண்டேஷன் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
போர்வை, பெட்ஷீட், வேட்டி மற்றும் துண்டு ஆகிய பொருட்கள் அடங்கிய, 300 செட் ஆடைகளை, பவுண்டேஷன் தலைவர் எஸ்.பி., டெக்ஸ் பொன்னுசாமி, உறுப்பினர்கள் சால்ட் சேகர், அம்மன் பேஷன்ஸ் சிவகுமார், சந்தியா வேலுசாமி, சுப்பு மற்றும் ரெட்கிராஸ் தாமு ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய் என, அமைப்பினர் தெரிவித்தனர்.