/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்லுாரி - ஐ.டி.ஐ., சேர்ந்த மாணவ, மாணவியர் கல்லுாரி - ஐ.டி.ஐ., சேர்ந்த மாணவ, மாணவியர்
கல்லுாரி - ஐ.டி.ஐ., சேர்ந்த மாணவ, மாணவியர்
கல்லுாரி - ஐ.டி.ஐ., சேர்ந்த மாணவ, மாணவியர்
கல்லுாரி - ஐ.டி.ஐ., சேர்ந்த மாணவ, மாணவியர்
ADDED : ஜூன் 30, 2024 12:36 AM

திருப்பூர்;கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாம் வாயிலாக, 200 மாணவ, மாணவியர், கல்லுாரி, ஐ.டி.ஐ.,யில் சேர்ந்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான கல்லுாரி சேர்க்கை முகாம் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் கல்லுாரிகள் பங்கேற்றன. முகாமில், கல்லுாரிகளில் காலியாக உள்ள படிப்புகள் தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
பெற்றோருடன் வந்த மாணவ, மாணவியர், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற, பாடங்களை தேர்வு செய்து, படிவத்தை பூர்த்தி செய்து கல்லுாரியில் சேர்ந்தனர். குறிப்பாக, முதலி பாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், அதிக அளவிலான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.
திருப்பூர் குமரன் கல்லுாரி, திருப்பூர் ஐ.டி.ஐ., என, பல்வேறு கல்வி நிலையங்களில், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மாணவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள் முகாமில் ஆர்வத்துடன் இணைந்தனர்.
முகாம் வாயிலாக சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கல்விக்கடன் உதவி, கல்வி கட்டண சலுகை போன்ற உதவியும் வழங்கப்பட உள்ளது.
நேற்றைய முகாமில், 200 மாணவ, மாணவியர், கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ.,களில் இணைந்தனர். கல்லுாரி சேர்க்கை உத்தரவை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப் கலெக்டர் சவுமியா, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், உயர் கல்வித்துறை மண்டல இயக்குனர் கலைச்செல்வி, திட்ட அலுவலர் அண்ணாதுரை, கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.