/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீண்டும் தக்காளி விலை உயர வாய்ப்பு மீண்டும் தக்காளி விலை உயர வாய்ப்பு
மீண்டும் தக்காளி விலை உயர வாய்ப்பு
மீண்டும் தக்காளி விலை உயர வாய்ப்பு
மீண்டும் தக்காளி விலை உயர வாய்ப்பு
ADDED : ஜூலை 14, 2024 11:34 PM

திருப்பூர்:வரத்து சரிந்தால், வரும் நாட்களில், தக்காளி விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
திருப்பூர் மார்க்கெட்களில், ஜூன் மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி, 70 முதல், 85 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை உயர்வால், தக்காளி விவசாயிகளுக்கு லாபம் கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளிமாநில மொத்த வியாபாரிகள், மைசூரு, மாண்டியா உள்ளிட்ட கர்நாடகாவில் இருந்து லாரிகளில் டன் கணக்கில் தக்காளியை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரே வாரத்தில் கிலோவுக்கு, பத்து ரூபாய் விலை குறைந்தது. இதற்கிடையே சரிந்திருந்த உள்ளூர் தக்காளி வரத்து இயல்புக்கு திரும்பியது.
உழவர் சந்தையில் கிலோ, 45 ரூபாய்க்கு தக்காளி விற்பனையானது. ரோட்டோரம், இரண்டரை கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை, குளிர்காற்று, லேசான துாறல் மழையால் தக்காளி வரத்து மீண்டும் மெல்ல குறைய துவங்கியது. ஆந்திரா, கர்நாடகா உட்பட வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால், அங்கிருந்தும் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு முகூர்த்த தினம் இல்லை என்பதால், நேற்றைய வரத்துக்கு ஏற்ப நிலை சமாளிக்கப்பட்டது. மொத்த விலையில், கிலோ, 40 ரூபாய்க்கும், சில்லறையில் கிலோ, 45 ரூபாய்க்கும் தக்காளி விற்றது. வரும் நாட்களில் வரத்து குறைந்தால், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர், வியாபாரிகள்.
---
தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.