/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 24 வங்கதேச நாட்டினர் திருப்பூர் அருகே சிக்கினர் 24 வங்கதேச நாட்டினர் திருப்பூர் அருகே சிக்கினர்
24 வங்கதேச நாட்டினர் திருப்பூர் அருகே சிக்கினர்
24 வங்கதேச நாட்டினர் திருப்பூர் அருகே சிக்கினர்
24 வங்கதேச நாட்டினர் திருப்பூர் அருகே சிக்கினர்
ADDED : ஜூன் 20, 2025 01:43 AM

பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது குறித்து, 'க்யூ பிராஞ்ச்' போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சின்னக்கரை, அருள்புரம், குன்னாங்கல்பாளையம் பகுதிகளில் முகாமிட்ட போலீசார், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சோதனையிட்டனர். நேற்று முன்தினம் இரவு மேற்கொண்ட சோதனையில், 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி, ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு சட்ட விரோதமாக தங்கி இருந்து, பனியன் நிறுவனங்களில், பல்வேறு பணிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களின் உண்மையான பெயர், முகவரி மற்றும் கைரேகை, அங்க அடையாளங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன.
இதில், கைதான அப்துல் ஹாலிக், 33, அமித், 37, ஹமீதுல் ஜானல், 38, மோனீர், 37, உட்பட, 24 பேரையும் மருத்துவ பரிசோதனைக்குப் பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.