/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரம் மரக்கன்று தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரம் மரக்கன்று
தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரம் மரக்கன்று
தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரம் மரக்கன்று
தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரம் மரக்கன்று
ADDED : அக் 14, 2025 11:14 PM

பல்லடம்; பல்லடம் நகரப் பகுதி வழியாகச் செல்லும் கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோவை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டை இணைக்கிறது.
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பல்லடம் -- குறுக்கத்தி (வெள்ளகோவில்) வரையிலான, 47 கி.மீ., துாரம், இரு வழிச்சாலையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை, 274 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலையாக சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்க பணிகள் நிறை வடைந்த நிலையில், தற்போது, பல்லடம் - குறுக்கத்தி வரை மரக்கன்றுகள் நடவு செய்து, பசுமையை ஏற்படுத்தும் முயற்சியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'பல்லடம் - வெள்ளகோவில் (குறுக்கத்தி) வரையிலான ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலை விரிவாக்கத்தின் போது எண்ணற்ற மரங்கள் அகற்றப்பட்டன. அவற்றுக்கு மாற்றாக, 47 கி.மீ., துாரத்துக்கு சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. மொத்தம், 5,070 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ள நிலையில், தற்போது, பல்லடம் -- பொங்கலுார் வரை மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றை பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,' என்றனர்.


