Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெள்ளகோவிலில் 8.5 செ.மீ., மழை

வெள்ளகோவிலில் 8.5 செ.மீ., மழை

வெள்ளகோவிலில் 8.5 செ.மீ., மழை

வெள்ளகோவிலில் 8.5 செ.மீ., மழை

ADDED : அக் 24, 2025 12:17 AM


Google News
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அவ்வகையில், நேற்றுமுன்தினம் காலை முதலே, மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 16.46 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக வெள்ளகோவிலில், 85 மி.மீ. கன மழை பெய்தது. வட்டமலைக்கரை ஓடை - 43.20, குண்டடம் - 25, காங்கயம் - 21, மடத்துக்குளம் - 18 மி.மீ. என மழை பதிவானது.

இதுதவிர, மூலனுார் - 14, நல்லதங்காள் ஓடை - 14, பல்லடம் - 13, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதி - 13, அவிநாசி - 12, ஊத்துக்குளி - 11, திருமூர்த்தி அணை - 10, திருப்பூர் தெற்கு தாலுகா பகுதி - 7, உடுமலை - 6, கலெக்டர் அலுவலக சுற்றுப்பகுதி - 5, உடுமலை அமராவதி அணை பகுதி - 5, உப்பாறு அணை - 4 மி.மீ., என்ற அளவில் மிதமான மழை பதிவானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us