/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பூண்டியில் மார்க்கெட் வளாகம் அமைக்கணும்! உணவுப் பொருள் முதன்மை செயலர் கடிதம்பூண்டியில் மார்க்கெட் வளாகம் அமைக்கணும்! உணவுப் பொருள் முதன்மை செயலர் கடிதம்
பூண்டியில் மார்க்கெட் வளாகம் அமைக்கணும்! உணவுப் பொருள் முதன்மை செயலர் கடிதம்
பூண்டியில் மார்க்கெட் வளாகம் அமைக்கணும்! உணவுப் பொருள் முதன்மை செயலர் கடிதம்
பூண்டியில் மார்க்கெட் வளாகம் அமைக்கணும்! உணவுப் பொருள் முதன்மை செயலர் கடிதம்
ADDED : ஜன 27, 2024 11:58 PM
திருப்பூர்:'பூண்டி நகராட்சியில் பூங்கா பராமரிப்பு, இறைச்சி, மீன் மார்க்கெட் உருவாக்க வேண்டும்' என, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர், நகராட்சி கமிஷனருக்கு பரிந்துரைந்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட, திருமுருகன் பூண்டி, போதிய நிர்வாக கட்டமைப்பின்றி திணறி வருகிறது. குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற முடியாமல் திணறி வருகிறது.
இதுதவிர, நகராட்சியில், 'மார்க்கெட் வளாகம்' என எதுவும் இல்லாததால், பூண்டி - திருப்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில் தான் மீன் கடைகள் செயல்படுகின்றன; அதே போன்று, கோழி, ஆட்டிறைச்சிக் கடைகளும் செயல்படுகின்றன. இதனால், அதிகளவில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
'நகராட்சியில் உள்ள பூங்கா பராமரிக்கப்பட வேண்டும்; மீன், இறைச்சிக் கடைகளுக்கென தனியாக வளாகம் அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில், உணவுப் பொருள் வழங்கல் முதன்மை செயலர் ஹர்சாய் மீனா, திருப்பூர் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,'திருமுருகன்பூண்டி நகராட்சியில், பூங்காக்களை அமைத்து பராமரித்தல், காய்கறி, இறைச்சி, மீன் மார்க்கெட் உருவாக்கி, பராமரித்தல்; குடிநீர் நிலைத் தொட்டிகள் அமைத்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில், அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.