Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசி கோவில் தீர்த்தத்தில் காசி விஸ்வநாதருக்கு அபிேஷகம்

அவிநாசி கோவில் தீர்த்தத்தில் காசி விஸ்வநாதருக்கு அபிேஷகம்

அவிநாசி கோவில் தீர்த்தத்தில் காசி விஸ்வநாதருக்கு அபிேஷகம்

அவிநாசி கோவில் தீர்த்தத்தில் காசி விஸ்வநாதருக்கு அபிேஷகம்

ADDED : அக் 08, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; உலக நலன் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள காசி தீர்த்தம் எடுத்துச் சென்று, வாரணாசி ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து வழிபாடு நடந்தது.

தட்சிணகாசி, தென் வாரணாசி, தென் வாரணவாசி, தென் பிரயாகை, திருப்புக்கெளியூர் என்று, பல்வேறு சிறப்பு பெயர்களை கொண்டு விளங்குகிறது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். 'காசியில் வாசி அவிநாசி' என்று 'ஸ்கந்த புராணத்தில், சிவமான்ய 60 அத்யாயங்களில், அவிநாசி ஸ்தலபுராணம் விரிவாக கூறப்பட்டுள்ளது.

வாரணாசியில் இருந்து பரவிய சிவக்கொழுந்து, திருப்புக்கொளியூர் என்ற அவிநாசியில் சிவலிங்கமாக தோன்றியதாக விவரிக்கிறது. காசியில் உள்ள புனித தீர்த்தத்துக்கு இணையான, 'காசி தீர்த்தம்', கிணற்று வடிவில், கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது.

இத்தகைய சிறப்பு பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, எடுத்துச்சென்று, வாரணாசியில் ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு, தீர்த்தாபிேஷகம் செய்யும் வழிபாட்டை, அவிநாசியில் செயல்படும் ஸ்ரீநம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா நடத்தியுள்ளது.அதனையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, காசி விஸ்வநாதருக்கு, மஹா அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது.

இதுகுறித்து ஸ்ரீநம்பி ஆரூரர் சிவகைங்கர்ய சபா ஒருங்கிணைப்பாளர் ஆரூர சுப்ரமண்ய சிவம் கூறுகையில், ''காசிக்கும், அவிநாசிக்கும் ஆதிகாலம் முதலாக, நேரடி தொடர்பு உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள காசி தீர்த்த கிணறு, இன்றும் அதற்கு சாட்சியாக விளங்குகிறது.

அவிநாசி கோவில் காசி தீர்த்தத்தை எடுத்துசென்று, வாரணாசி ஸ்ரீகாசிவிஸ்வேரருக்கு தீர்த்தாபிேஷகம் செய்து வழிபட்டோம். காசி விஸ்வநாதருக்கு சாற்றிய புஷ்பம், வஸ்திரங்களை பெற்றுவந்து, அவிநாசிலிங்கேஸ்வருக்கு சாற்றி வழிபாடு செய்யப்படும். காசியை போலவே, அவிநாசி திருத்தலமும், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்ற மும்மை சிறப்பு பெற்றது. அவ்வகையில், உலக நலன், அமைதி மற்றும் மழை வளம் வேண்டி காசியையும், அவிநாசியையும் ஒருங்கே தரிசிக்கும் வழிபாட்டை நடத்தினோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us