ADDED : அக் 02, 2025 11:37 PM

திருப்பூர்;காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி, மதுவை இரு மடங்கு கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
நேற்று தாராபுரம், காங்கயம், பல்லடம் மற்றும் நகரில் சில இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு ஜோராக விற்பனை நடந்தது. 'டாஸ்மாக்' கடை மூடப்பட்ட நிலையிலும் கூட, அந்த கடைகளையொட்டி கொஞ்ச துாரத்தில் முள்காட்டுக்குள் பதுக்கி, விற்பனை செய்து வந்தனர்.
ஒரு சில இடங்களில், கடை வளாகம் முன்பு 'குடி'மகன்கள் மது அருந்தினர். போலீசாருக்கு புகார் சென்றாலும், நடவடிக்கை என்பது பெயரவில் நின்று விட்டது.


