/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முன்னாள் மாணவர் சந்திப்பு நண்பர்களை சந்தித்து நெகிழ்ச்சி முன்னாள் மாணவர் சந்திப்பு நண்பர்களை சந்தித்து நெகிழ்ச்சி
முன்னாள் மாணவர் சந்திப்பு நண்பர்களை சந்தித்து நெகிழ்ச்சி
முன்னாள் மாணவர் சந்திப்பு நண்பர்களை சந்தித்து நெகிழ்ச்சி
முன்னாள் மாணவர் சந்திப்பு நண்பர்களை சந்தித்து நெகிழ்ச்சி
ADDED : ஜூன் 01, 2025 07:18 AM

திருப்பூர், : திருப்பூர், அவிநாசிபாளையம், ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முன்னாள் மாணவர் சந்திப்பு, 'மீண்டும் இணை... மீண்டும் உயிர்ப்பி... மகிழ்ச்சி' என்ற தலைப்பில் நடைபெற்றது.
விழாவில், தங்களுடன் பயின்ற நண்பர்களைக் காணும் ஆவலில் காலை முதலே கல்லுாரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் கூடத் துவங்கினர். அவர்களை இந்நாள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பழைய வகுப்பறைகளுக்குச் சென்று, அதே இடத்தில் வகுப்பு தோழர்களுடன் அமர்ந்து அளவளாவி மகிழ்ந்தனர்.
வளாகத்தினுள் அமைத்திருந்த பல்வேறு ஸ்டால்களைப் பார்வையிட்டனர். கல்லுாரி வளாகத்தில் பல இடங்களிலும் நண்பர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.மேடை நிகழ்ச்சி ஏ.பி.ஜே., அரங்கில் நடைபெற்றது. முன்னதாக முன்னாள் மாணவி நந்தினி வரவேற்றார்.
கல்லுாரி நிறுவனர் சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கல்லுாரி முன்னாள் முதல்வர் குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில், கல்லுாரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியன நடைபெற்றது.