ADDED : அக் 12, 2025 10:28 PM
உடுமலை ; அரசு தேர்வுகள் இயக்ககத்தால், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வை எழுதும், பிளஸ் 1 மாணவர்கள், தேர்ச்சி பெற்றால், பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுதும், 950 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சின்னச்சாமி அம்மாள், பழனியம்மாள், ஜெய்வாபாய் பள்ளிகள் உள்ளிட்ட, 24 மையங்களில், தேர்வு நடந்தது.
தேர்வெழுத விண்ணப்பித்திருந்த, 8,227 பேரில், 456 பேர் தேர்வுக்கு வரவில்லை; 7,771 பேர் தேர்வெழுதினர்.


