Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த அவிநாசி நகராட்சி நிர்வாகம் முனைப்பு

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த அவிநாசி நகராட்சி நிர்வாகம் முனைப்பு

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த அவிநாசி நகராட்சி நிர்வாகம் முனைப்பு

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த அவிநாசி நகராட்சி நிர்வாகம் முனைப்பு

ADDED : அக் 21, 2025 11:02 PM


Google News
அவிநாசி: அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான (வெண்டிங் கமிட்டி) விற்பனை குழு கூட்டம் கடந்த மாதம் 30ம் தேதி நகராட்சி தலைவர், கமிஷனர் மற்றும் நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதுகுறித்து கவுன்சிலர்களின் ஒப்புதலுக்கு தீர்மானம் வைக்கப்பட்டது. சாலையோர வியாபாரம் செய்பவர்களின் பகுதிகளை வியாபாரப் பகுதி மற்றும் தடை செய்யப்பட்ட வியாபாரப் பகுதி என பிரிக்கப்பட்டு, கடைகளை முறைப்படுத்துவதற்காக வியாபார பகுதி, தடை செய்யப்பட்ட வியாபார பகுதி என பிரித்துள்ளனர்.

இது குறித்த விவரம் வருமாறு:

எங்கு கடை வைக்கலாம் சேவூர் ரோடு, ஆண்டவர் ஒர்க் ஷாப் முதல் பாரத் பெட்ரோல் பங்க் வரை, சூளை பஸ் ஸ்டாப்பில் இருந்து நகர எல்லை வரை, சேவூர் ரோடு கதர் கிராமத் தொழில் வாரியம் முன்புறம், அதன் எதிர்ப்புறம் பஸ் ஸ்டாப் நிறுத்தம் வரை (கே.கே.பேக்கரி வரை), பயணியர் விடுதி முதல் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் நுழைவாயில் வரை (ஒருபுறம் மட்டும்), குலாலர் திருமண மண்டபம் எதிர்ப்புறம், சுமங்கலி விஸ்வநாதன் கடை முதல் வருவாய்த்துறை இடம் வரை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்புறம், சேலம் மெயின் ரோடு உரப்பூங்கா முதல் நகர எல்லை வரை.

புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் சிவசாமி மருத்துவமனை அருகில் மற்றும் தினசரி மார்க்கெட் முன்புறம், (ராமராஜ் அருகில்), கைகாட்டிப்புதுார் மாரியம்மன் கோவில் முதல் நகராட்சி எல்லை வரை.

எங்கு வைக்கக்கூடாது அரசு கட்டடங்கள் நுழைவாயிலில் இருந்து, 10 மீ. துாரம், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் இருந்து, 50 மீ. துாரம் உள்ள பகுதிகள், பள்ளிகள், கல்லுாரிகள் ஆகியன உள்ள பகுதிகளில் நுழைவுப் பகுதியில் இருந்து, 30 மீ. துாரம் உள்ள பகுதிகள், சிவசாமி மருத்துவமனை பாலம் முதல் கிராண்ட் பேக்கரி வரை, சேவூர் ரோடு கே.கே. பேக்கரி முதல் கால்நடை மருத்துவமனை வரை.

சேவூர் ரோடு, சிந்தாமணி தியேட்டர் முதல் வடக்கு ரத வீதி தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபம் வரை இருபுறமும் தடை செய்யப்பட்ட பகுதி, ஏவிபி சில்க்ஸ் முதல் தண்ணீர் பந்தல் வரை (ரமணா ஆசிரமம்) பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள பயணிகள் நிழற்குடை வரை (மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நீங்கலாக).

நகராட்சி பகுதிகளில் வியாபாரம் செய்பவர்கள் நகர விற்பனை குழுவின் விதிகளின் படி வியாபாரம் செய்யவும், அதனை மீறி செய்பவர்கள் மீது அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்று ரத்து செய்யவும்,தடை செய்யப்பட்ட பகுதியில் வியாபாரம் செய்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us