/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 26, 2025 05:23 AM
உடுமலை; பிரதமரின் இளம் சாதனையாளர்களுக்கான (ஒய்.ஏ.எஸ்.ஏ.எஸ்.வி.ஐ.,) கல்வி உதவித்தொகைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் மனீஷ் நாரணவரே கூறியிருப்பதாவது:
பிரதமரின் இளம் சாதனையாளர்களுக்கான (ஒய்.ஏ.எஸ்.ஏ.எஸ்.வி.ஐ.,) கல்வி உதவித்தொகைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
2025 - 26ம் ஆண்டுக்கு, தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு, 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்; தகுதியான மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் விண்ணப்பங்களை, வரும் அக். 15ம் தேதிக்குள் சரிபார்க்கவேண்டும்.
இந்த திட்டத்தில், கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், http://scholarships.gov.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்து, 2025 - 26ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகைதளத்தில், தங்கள் மொபைல் எண், ஆதார் விபரங்களை உள்ளீடு செய்யவேண்டும். ஓ.டி.பி.,யை வழங்கி, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.