Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குடியிருப்பு பகுதியில் 'சிசிடிவி' கேமரா இயக்கம்

குடியிருப்பு பகுதியில் 'சிசிடிவி' கேமரா இயக்கம்

குடியிருப்பு பகுதியில் 'சிசிடிவி' கேமரா இயக்கம்

குடியிருப்பு பகுதியில் 'சிசிடிவி' கேமரா இயக்கம்

ADDED : செப் 30, 2025 01:10 AM


Google News
திருப்பூர்; திருமுருகன்பூண்டி, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர்., நகர் எஸ்.பி., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தின. பொது செயலர் கிறிஸ்டோபர் வரவேற்றார். சங்க இணை செயலர் வேதகிரி, தலைமை வகித்தார்.

சங்க தலைவர் காதர்பாஷா பேசுகையில், ''இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அரசு உயரதிகாரிகள் பங்கேற்கும் போது, அவர்களது அனுபவம் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக அமையும்; அவர்கள் மனதில் ஆழமாக பதியும்,'' என்றார்.

திருப்பூர் மாநகர துணை கமிஷனர் பிரவீன் கவுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, குடியிருப்போர் நலன் கருதி பொருத்தப்பட்ட, 30 'சிசிடிவி' கேமரா இயக்கத்தை துவக்கி வைத்தனர்.

பின், அவிநாசி சலங்கை நிருத்யாலயா கலைக்கூட கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் கவிதா, தனசேகர், சதாசவம், அன்பழகன், அசோக் ஆகியோர் பேசினர். நுகர்வோர் சேவையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

புதிதாக சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. சங்க செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us