/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சென்சுரி பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அசத்தல் சென்சுரி பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அசத்தல்
சென்சுரி பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அசத்தல்
சென்சுரி பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அசத்தல்
சென்சுரி பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் அசத்தல்
ADDED : அக் 09, 2025 12:01 AM

திருப்பூர்; பள்ளிகளுக்கான விளையாட்டுக்குழுமம் நடத்திய கோவை மண்டல அளவிலான ஹாக்கி தேர்வு போட்டி குன்னுார், அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர் சென்சுரி பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
இதில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முகமது ஆரிப் தேர்வு செய்யப்பட்டு, சிவகங்கையில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஹாக்கி தேர்வுப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் மித்ரன் தேர்வு செய்யப்பட்டு, அரியலுாரில் நடைபெற உள்ள மாநில ஹாக்கி தேர்வுப்போட்டியில் பங்கேற்கிறார். இவர்களையும், ஹாக்கி பயிற்சியாளர் பாலசுப்பிரமணியத்தையும், பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


