/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று தந்த 56 தலைமை ஆசிரியர் விபரம் சேகரிப்பு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று தந்த 56 தலைமை ஆசிரியர் விபரம் சேகரிப்பு
நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று தந்த 56 தலைமை ஆசிரியர் விபரம் சேகரிப்பு
நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று தந்த 56 தலைமை ஆசிரியர் விபரம் சேகரிப்பு
நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று தந்த 56 தலைமை ஆசிரியர் விபரம் சேகரிப்பு
ADDED : மே 27, 2025 07:02 PM
உடுமலை : பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த, 56 பள்ளி தலைமை ஆசிரியர் விபரங்கள், பள்ளி கல்வித்துறைக்கு பட்டியலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இதில், 97.53 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாநிலம் மூன்றாமிடம் பெற்றது. 18 அரசு பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று அசத்தின. 16ம் தேதி வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், திருப்பூர், 17 வது இடம் பெற்றது; 38 அரசு பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற 56 பள்ளிகள், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, அப்பள்ளி தலைமை ஆசிரியர் செயல்பாடு குறித்த பட்டியல் சேகரித்து, சென்னை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டிய பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் சென்டம் பெற்ற பெற்றுத்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விபரம் சேகரித்து அனுப்பப்பட்டுள்ளது. பாராட்டுச்சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,' என்றனர்.