/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பை பிரச்னை விஸ்வரூபம் 500 மனுக்கள் அளிக்க முடிவு குப்பை பிரச்னை விஸ்வரூபம் 500 மனுக்கள் அளிக்க முடிவு
குப்பை பிரச்னை விஸ்வரூபம் 500 மனுக்கள் அளிக்க முடிவு
குப்பை பிரச்னை விஸ்வரூபம் 500 மனுக்கள் அளிக்க முடிவு
குப்பை பிரச்னை விஸ்வரூபம் 500 மனுக்கள் அளிக்க முடிவு
ADDED : செப் 25, 2025 12:22 AM
திருப்பூர்: முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதித்துள்ள மக்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமில், இதுதொடர்பாக, நுாற்றுக்கணக்கான மனுக்களை வழங்கி அதிகாரிகளை திக்குமுக்காட செய்ய திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில், தினசரி, 700 முதல், 800 மெ.டன் குப்பை வெளியேறுகிறது. மாநகராட்சி சார்பில் குப்பைக் கொட்ட இடமில்லாததால், மாநகராட்சி நிர்வாகம் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டி வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்னையின் மீது அரசின் கவனம் திருப்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும், 30ம் தேதி முதலிபாளையம் சமுதாயக் கூடத்தில், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வழங்கப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில், பாறைக்குழியில் குப்பை கொட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 500க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கி, அரசின் கவனம் ஈர்க்கவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.