/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநகராட்சி பூங்காவில் மின் ஒயர்கள் அறுப்பு மாநகராட்சி பூங்காவில் மின் ஒயர்கள் அறுப்பு
மாநகராட்சி பூங்காவில் மின் ஒயர்கள் அறுப்பு
மாநகராட்சி பூங்காவில் மின் ஒயர்கள் அறுப்பு
மாநகராட்சி பூங்காவில் மின் ஒயர்கள் அறுப்பு
ADDED : அக் 14, 2025 01:01 AM

திருப்பூர்;திருப்பூர், 57வது வார்டு, காளிகுமாரசுவாமி அடுத்துள்ள, வீரபாண்டி - கோவில்வழி ரோட்டில், சிவசக்தி நகர் உள்ளது. இங்கு மாநகராட்சி பூங்கா, 1.80 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது.
மின் இணைப்பின்றி இருந்த நிலையில், நான்கு மாதங்கள் முன், மாநகராட்சி மின் இணைப்பு வழங்கி, புதிய அலங்கார விளக்குகளை பொருத்தியிருந்தது.
நள்ளிரவு பூங்காவுக்குள் நுழைந்த சமூக விரோதிகள் விளக்குகளை உடைத்ததுடன், 'சிசிடிவி' கேமரா, சுவிட்ச்போர்டில் இருந்த மின் ஒயர்களை அறுத்து திருடிச்சென்றுள்ளனர்.
சிவசக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர் மோகன்ராஜ் கூறுகையில், 'சமீபத்தில் தான் மாநகராட்சி மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்து சீரமைத்தது. குழந்தைகள், முதியவர்கள் மாலை நேரங்களில் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயம் கைது செய்ய வேண்டும்,' என்றார். மாநகராட்சி அதிகாரிகள், வீரபாண்டி போலீசார் பூங்காவில் சேதம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.


