/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்
மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்
மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்
மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்
ADDED : செப் 23, 2025 08:47 PM

உடுமலை, ;உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தி.மு.க.,தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
மின் வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
திட்டத்தலைவர் ஜெகானந்தா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட ஒருங்கிணைப்பு குழு விஸ்வநாதன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.