/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி இரட்டிப்பாகும்! ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் நம்பிக்கை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி இரட்டிப்பாகும்! ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் நம்பிக்கை
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி இரட்டிப்பாகும்! ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் நம்பிக்கை
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி இரட்டிப்பாகும்! ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் நம்பிக்கை
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி இரட்டிப்பாகும்! ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் நம்பிக்கை
ADDED : செப் 23, 2025 11:57 PM

திருப்பூர்; ''புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி, 2028ல் இரட்டிப்பாகும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கதின், 35வது பொதுக்குழுவில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகக்குழுவும் பொறுப்பேற்றுள்ளது.
தலைவராக சுப்பிரமணியன், பொதுசெயலாளராக திருக்குமரன், பொருளாளராக கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்களாக இளங்கோவன், ராஜ்குமார்; இணை செயலாளர்களாக குமார்துரைசாமி, ஆனந்த் முத்துசாமி மற்றும் 30 செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.
விழாவில், சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
மத்திய அரசு, பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலமாக, திருப்பூருக்கு வரும் பிரிட்டன் ஆர்டர்கள் இரட்டிப்பாக வளர்ச்சி பெறும். ஐரோப்பிய ஒன்றியத்துடனும், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, தற்போதுள்ள அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம், 19 ஆயிரத்து, 199 கோடி ரூபாய் என்பது, 2028ம் ஆண்டிலேயே, இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.
அமெரிக்கா அதிகப்படியாக வரியை உயர்த்தியள்ளதால், குறு. சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில், ஜவுளி துறைக்கான நிதி, 5,252 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திசைகளில் இருந்து வரும் சவால்களை, திருப்பூர் கிளஸ்டர் ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக சமாளித்து மீண்டெழுந்து வருகிறது. திருப்பூர் தொழில்முனைவோரின் தீவிர உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் புதிய வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.