ADDED : பிப் 25, 2024 12:32 AM

பல்லடம்:டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், பல்லடம் தபால் அலுவலகம் முன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் டெல்லி பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட செயலாளர் குமார் பொருளாளர் பாலதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, போலீசார் தாக்குதல் காரணமாக விவசாயி பலியானதை கண்டித்து, கருப்புக் கொடி ஏந்தியபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.