/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மெத்தனம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மெத்தனம்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மெத்தனம்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மெத்தனம்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மெத்தனம்
ADDED : செப் 24, 2025 11:52 PM
திருப்பூர்: உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் மெத்தனத்தால், திருப்பூரில், சுகாதாரமற்ற, தரமில்லாதவகையில் உணவு தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறைகேட்பு கூட்டத்தில் நேற்று, கலெக்டரிடம் நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம், அளித்த மனு:
திருப்பூரில், ஓட்டல், பேக்கரிகள் ஏராளம் இயங்குகின்றன. இவற்றில், சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகள், சுகாதாரமாக பாதுகாக்கப்படுவதில்லை. ஈக்கள், கொசு, கரப்பான் பூச்சி மொய்க்கும் வகையில், உணவு தயாரிக்கப்பட்டு, திறந்து வைத்து பரிமாறப்படுகிறது.
பலகாரங்களில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொடிகள் கலக்கப்படுகின்றன. பேக்கரிகளில் போலி டீ துாள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மலிவான விலையில், தரமற்ற மூலப்பொருட்களை பயன்படுத்தி உணவு பதார்த்தங்கள் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள ஒரு உணவகத்தில், மீதமாகும் சிக்கனை பிரிட்ஜில் வைத்து, சுகாதாரமற்ற முறையில் சமைத்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர். சுகாதாரமற்ற உணவு தயாரிப்பு தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக இருந்து வருகின்றனர்.
ஓட்டல்கள், பேக்கரிகளில் ஆய்வு நடத்தி, மக்களுக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.