/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இணையத்தில் மோசடி விளம்பரங்கள் பொதுமக்களிடம் பணம் சுருட்டல் இணையத்தில் மோசடி விளம்பரங்கள் பொதுமக்களிடம் பணம் சுருட்டல்
இணையத்தில் மோசடி விளம்பரங்கள் பொதுமக்களிடம் பணம் சுருட்டல்
இணையத்தில் மோசடி விளம்பரங்கள் பொதுமக்களிடம் பணம் சுருட்டல்
இணையத்தில் மோசடி விளம்பரங்கள் பொதுமக்களிடம் பணம் சுருட்டல்
ADDED : ஜூன் 02, 2025 06:26 AM
திருப்பூர் : ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகின்றன. இதில் தற்போது புதிதாக சலுகை விலையில் உலர் பழம் உள்ளிட்டவை விற்பனை என்று பணம் பறிக்கும் செயல் அரங்கேறி வருகிறது.
இணைய தளங்களில் சைபர் மோசடி கும்பல்கள் தினமும் பல விதங்களில் மோசடி செய்து பணம் பறிப்பது வாடிக்கையாக உள்ளது. இதில் தற்போது சமூகவலைதள சேனல்களில் விளம்பரம் வெளியிட்டு பண மோசடி செய்யும் செயல் அதிகரித்துள்ளது.
ஷார்ட்ஸ் பார்க்க பெரும் பார்வையாளர் வட்டம் உள்ளது. தற்போது, உலர் பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவை சலுகை விலையில் விற்பனை செய்வதாக முன்னணி நிறுவனங்கள் போன்ற தோற்றத்தில் விளம்பரங்கள் வெளியாகிறது.
அதில் போலியாக, பார்வையாளர்கள் ரேட்டிங் கொடுத்தது போல் தகவல் இடம் பெற்றுள்ளது. கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலையுள்ள பொருட்கள் கிலோ 200க்கும் குறைவு என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் உள்நுழைந்து ஆன் லைனில் பணம் செலுத்தினால், வங்கி கணக்கில் பணம் டெபிட் ஆனவுடன், அந்த தளத்திலேயே வங்கி அறிவிப்பு போல் தகவல் வருகிறது.
தவறாக பணம் டெபிட் ஆகியிருந்தால் 3 முதல் 5 நாளில் பணம் திரும்ப வரும் என்று அதில் தெரிவிக்கப்படுகிறது. உஷாரான நபர்கள் அந்த தளத்தில் உள்ள விளம்பரத்தில் சென்று, கமென்ட்ஸ் பகுதியில் இது குறித்து எச்சரிக்கை பதிவு செய்யலாம் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் இருப்பதில்லை. இதனால், பணம் ஏமாந்தவர்கள் மற்றவர்களை எச்சரிக்கை செய்யவும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.
இதனால், இவ்வகை மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து, பணம் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேனல் நடத்துவோர் இது போன்ற போலியான, மோசடியான விளம்பரங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள்.
இதில் ஆர்டர் செய்து பணத்தை இழக்கும் நபர்கள் சில நுாறு ரூபாய் என்பதால் அது குறித்து பொருட்படுத்தாமல் அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்கி விடுகின்றனர்.
ஆனால் தினமும் ஏமாறும் அப்பாவி மக்கள் நுாற்றுக்கணக்கானோர் மூலம் மோசடி கும்பல் லட்சக்கணக்கில் பணம் சுருட்டுகிறது என்பது தான் எதார்த்தமான உண்மை.