Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச மருத்துவ காப்பீடு; ஆதார் போதும்

இலவச மருத்துவ காப்பீடு; ஆதார் போதும்

இலவச மருத்துவ காப்பீடு; ஆதார் போதும்

இலவச மருத்துவ காப்பீடு; ஆதார் போதும்

ADDED : அக் 10, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஏழைகள் சுகாதார காப்பீடு பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பின்தங்கிய தொழிலாளருக்கு, 'பி.எம்.ஜெ.ஏ.ஒய்.,' (பிரதமர் ஜன் ஆரோக்யா யோஜனா) திட்ட ம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கிறது.

திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தை கொண்டு சேர்க்கும் பணியை, 'லகு உத்யோக் பாரதி' மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதங்களில், 250 பனியன் நிறுவனங்கள் வாயிலாக, 3,200 தொழிலாளர்களுக்கு, காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

'லகு உத்யோக் பாரதி' திருப்பூர் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:

பனியன் நிறுவனங்கள் விரும்பினால், மருத்துவ முகாம் நடத்தி, அதன் வாயிலாக, மருத்துவ காப்பீடு அட்டையும், 'அபா' கார்டு என்ற முழுமையான (டிஜிட்டல்) மருத்துவ தகவல்கள் அடங்கிய, மருத்துவ அட்டையும் வழங்கி வருகிறோம். திருப்பூரில், ஒட்டுமொத்தமாக 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் இருக்கின்றனர்; அவர்களில், 20 சதவீதம் பேருக்காவது, இலவசமாக மத்திய அரசு மருத்துவ காப்பீடு அட்டை பெற்றுத்தர இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

ஆண்டு குடும்ப வருமானம் உள்ளிட்ட எவ்வித சான்றிதழும் தேவையில்லை. தொழிலாளியின், ஆதார் எண்ணை பதிவு செய்தால், 2011ல் தயாரிக்கப்பட்ட பின்தங்கிய குடும்பங்கள் பட்டியல் வாயிலாக, காப்பீடு திட்டத்தில் இணைத்து வருகிறோம்.

பனியன் நிறுவனம், 'ஜாப்ஒர்க்' நிறுவனம் மட்டுமின்றி, அனைத்து குறுந்தொழில் நிறுவனங்களும், இதுதொடர்பாக எங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, lubtirupur23@gmail.com என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us