/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூரில் அரசு கிளை அச்சகம் திறப்பு; 4 மாவட்ட மக்களுக்கு பயன் திருப்பூரில் அரசு கிளை அச்சகம் திறப்பு; 4 மாவட்ட மக்களுக்கு பயன்
திருப்பூரில் அரசு கிளை அச்சகம் திறப்பு; 4 மாவட்ட மக்களுக்கு பயன்
திருப்பூரில் அரசு கிளை அச்சகம் திறப்பு; 4 மாவட்ட மக்களுக்கு பயன்
திருப்பூரில் அரசு கிளை அச்சகம் திறப்பு; 4 மாவட்ட மக்களுக்கு பயன்
பெயர் மாற்றம் எளிது
தமிழகத்தில், சென்னை, சேலம், மதுரை, திருச்சி, விருத்தாச்சலம், புதுக்கோட்டை ஆகிய ஆறு இடங்களில் அரசு அச்சகம் செயல்பட்டு வந்தது. அதன், 7வது கிளை, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் பின்புறம் திறக்கப்பட்டுள்ளது.
3 வாரத்தில் பெயர் மாறும்
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மக்கள், திருப்பூர் அச்சக கிளையை பயன்படுத்தலாம். கிளை அச்சகத்தில் படிவங்களை பெற்றும், பதிவிறக்கம் செய்தும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பரிசீலித்து, மூன்று வாரத்தில் அரசிதழில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதற்காக, இடைத்தரகர்களை அணுக வேண்டியதில்லை.
கட்டணம் ரூ.150
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய, 'படிவம் -1'ல் விண்ணப்பிக்க வேண்டும். தமிழில் பெயர் மாற்றம் செய்ய, 150 ரூபாயும், ஆங்கிலத்தில் மாற்றம் செய்யவும், பெயருடன் மதமாற்றம் செய்யவும், 750 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.