ADDED : அக் 03, 2025 09:19 PM
உடுமலை; உடுமலை அருகே, தளி, கணியூர், சங்கராமநல்லுார், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகள், விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. அங்கு வசிக்கும் தொழிலாளர்களுக்கு பெரும்பாலான நாட்கள் வேலைவாய்ப்பு இருப்பதில்லை. எனவே, நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டாமல் உள்ளது. திட்டத்தின் நிலை குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு தரப்பில் தகவல் இல்லை. இது குறித்து போராட்டம் நடத்தியும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


