/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஹிந்து அன்னையர் முன்னணி ஆளுமை பண்பு பயிற்சி முகாம் ஹிந்து அன்னையர் முன்னணி ஆளுமை பண்பு பயிற்சி முகாம்
ஹிந்து அன்னையர் முன்னணி ஆளுமை பண்பு பயிற்சி முகாம்
ஹிந்து அன்னையர் முன்னணி ஆளுமை பண்பு பயிற்சி முகாம்
ஹிந்து அன்னையர் முன்னணி ஆளுமை பண்பு பயிற்சி முகாம்
ADDED : செப் 24, 2025 12:16 AM

அவிநாசி; அவிநாசியில், பாரதி யார் குருகுலம் அறக்கட்டளை மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி இணைந்து பெண்கள் ஆளுமை பயிற்சி முகாமை நடத்தினர்.
அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய அரங்கில், பாரதியார் குருகுலம் அறக்கட்டளை மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி இணைந்து திருப்பூர் மாநகர மாவட்ட பெண்கள் ஆளுமை பண்பு பயிற்சி முகாமை நடத்தினர்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்டச் செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் கேசவன், நிர்வாகிகள் மணிகண்டன், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில், திருப்பூர் மாவட்ட ஹிந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, 200 பேர் பங்கேற்றனர்.