/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ADDED : அக் 03, 2025 10:43 PM

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் சார்பில், அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பங்கேற்றனர். கண், காது மூக்கு தொண்டை, மன நலம், எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து சான்று அளித்தனர்.
அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். மொத்தம் 27 பேர் பங்கேற்ற நிலையில், தகுதியுள்ள 19 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.


