ADDED : ஜூன் 02, 2025 06:22 AM
இந்திய கம்யூ., கட்சியின் திருப்பூர் மாநகரம் முதல் மண்டல ஐந்தாவது மாநாடு அண்ணா காலனியில் நடந்தது.
மாநாட்டு கொடியை மூத்த நிர்வாகி கந்தசாமி ஏற்றிவைத்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநாட்டை தொடங்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் காளியப்பன், செந்தில் குமார், விஜய் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மண்டல செயலாளர் செல்வராஜ், அறிக்கையை முன் வைத்தார். செயலாளராக செல்வராஜ் உள்பட 15 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை முன்னாள் கவுன்சிலர் நடராஜன் அறிமுகப்படுத்தி பேசினார்.
திருப்பூர் மாநகரில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதும் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.