ADDED : செப் 18, 2025 11:33 PM

பொங்கலுார்; கொடுவாய் பகுதியில், பூட்டிய வீட்டில், நகை மற்றும் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கொடுவாய், மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன், 68. உடல்நலம் சரியில்லாததால் இரண்டு மாதங்களுக்கு முன் சிகிச்சை பெற சென்னை சென்று விட்டார்.
இந்நிலையில் அவரது மகன் தமிழ்வாணன் வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இரு ந்த டிவி, அரை பவுன் தங்க கம்மல், மொபட், ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன திருட்டுப் போனது தெரிய வந்தது.
இது குறித்து அவர் அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.
விசாரணை நடத்திய போலீசார், நகை மற்றும் பணம் திருடிய கொடுவாயைச் சேர்ந்த ரங்கசாமி மகன் கிருஷ்ணன், 42 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


