/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மூதாட்டியிடம் நகை பறிப்பு; ஆந்திராவில் 2 பேர் கைது மூதாட்டியிடம் நகை பறிப்பு; ஆந்திராவில் 2 பேர் கைது
மூதாட்டியிடம் நகை பறிப்பு; ஆந்திராவில் 2 பேர் கைது
மூதாட்டியிடம் நகை பறிப்பு; ஆந்திராவில் 2 பேர் கைது
மூதாட்டியிடம் நகை பறிப்பு; ஆந்திராவில் 2 பேர் கைது
ADDED : செப் 23, 2025 11:59 PM

அவிநாசி; அவிநாசி, வி.எஸ்.வி. காலனியை சேர்ந்த தங்கம் 72, என்பவர், கடந்த, 4ம் தேதி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வங்கியில் பணம் செலுத்தி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவரை பின் தொடர்ந்து டூ வீலரில் வந்த இரு வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த மூன்று சவரன் நகையை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து அவிநாசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, காந்திஜி நகரை சேர்ந்த ரியாத் அலி மகன் யூனுஸ் உசைன் 24 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஷனபுல்லா மகன் மொகல் ஜாபர் 21, என தெரிந்தது.
இவ்விருவரும், ஆந்தி ராவில் பதுங்கி இருந்ததை தனிப்படை போலீசார் கண்டறிந்து, அங்கு சென்று இருவரையும் கைது செய்து, அவிநாசி ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.