/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 01, 2025 07:23 AM

திருப்பூர் : தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின், திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று பல்லடத்தில் நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில், நீதித்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பிரகாஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியம்மாள், மாவட்ட இணைச் செயலாளர் ராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தி, அதில், சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக ராஜா, துணைத் தலைவராக சத்தியமூர்த்தி, செயலாளராக தாமோதரன், இணைச் செயலாளராக சுரேஷ் கேசவன், பொருளாளராக செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், மாநில செயற்குழு உறுப்பினர்களாக மலர் மோகன்ராஜ், மருதவாணன், மாரீஸ்வரன், ராணி ஆகியோர் தேர்வாகினர். மாநில செயற்குழு உறுப்பினர் மருதவாணன் நன்றி கூறினார்.