ADDED : அக் 04, 2025 11:16 PM

திருப்பூர்: கரூரில் நடந்த த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என, காங்.எம்.பி., ராகுல் தெரிவித்திருந்தார்.
பலியான திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேரின் குடும்பத் தினரை சந்தித்த கரூர்எம்.பி. ஜோதிமணி, காங். தேசிய செயலர் கோபிநாத் பழநியப்பன் ஆகியோர், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, காங். கட்சி சார்பில், தலா, 2.50 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினர்.


