ADDED : டிச 04, 2025 08:09 AM
சிவன்மலை: காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை, மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி புறப்பாடு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீப ஸ்தம்பத்தில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகர கோஷம் எழுப்பி ஜோதி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


