/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கற்றல் பொருட்களை பயன்படுத்த மேலாண் குழுவினர் வலியுறுத்தல் கற்றல் பொருட்களை பயன்படுத்த மேலாண் குழுவினர் வலியுறுத்தல்
கற்றல் பொருட்களை பயன்படுத்த மேலாண் குழுவினர் வலியுறுத்தல்
கற்றல் பொருட்களை பயன்படுத்த மேலாண் குழுவினர் வலியுறுத்தல்
கற்றல் பொருட்களை பயன்படுத்த மேலாண் குழுவினர் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 05:19 AM
உடுமலை; வகுப்பறை நிகழ்வுகளில், கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த, கற்றல் உபகரணங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வாயிலாக, கணிதத்திறன் மற்றும் அறிவியல் மேம்பாட்டை கணித உபகரணப்பெட்டிகள், அறிவியல் கருவிகள், ஆங்கில உபகரணப்பெட்டி, புத்தக பூங்கொத்து திட்டம், நுாலக புத்தகங்கள், குறுந்தகடுகள், அகராதி, கம்ப்யூட்டர் வசதி, மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தும், மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கு வழங்கப்படுகின்றன.
இந்த கருவிகள், பல பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதில்லை. தவிர தன்னார்வலர்கள், மற்றும் கல்விசீர் மூலம் வழங்கப்பட்ட பொருட்களும் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. மாணவர்க ளின் சிந்திக்கும் திறன், படைப்பாற்றல், அறிவாற்றலை மேம்படுத்த, துணைப் பொருட்களை முழுமைாக பயன்படுத்த வேண்டும் சூழல் உள்ளது.
அரசுப்பள்ளிகளில் துணைப் பொருட்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும். பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்களை, முழுமையாக பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கு, கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.