Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இருதய அறுவை சிகிச்சையில் மணி மகுடம் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர்

இருதய அறுவை சிகிச்சையில் மணி மகுடம் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர்

இருதய அறுவை சிகிச்சையில் மணி மகுடம் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர்

இருதய அறுவை சிகிச்சையில் மணி மகுடம் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர்

ADDED : ஜூலை 01, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில் இயங்கி வரும் ரேவதி மெடிக்கல் சென்டர் சேர்மன் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த எட்டாண்டு முன் வரை, இருதய நோயால் பாதிக்கப்படுவோர், மணிக்கணக்கில் சிரமப்பட்டு பயணித்து கோவைக்குச் சென்று தான் சிகிச்சை பெறும் நிலை இருந்தது. அவ்வகையில் இந்த நீண்ட நேரப் பயணம் பல உயிர்களைப் பறித்துள்ளது.

தற்போது ரேவதி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த இருதய சிகிச்சை மையம் இதற்கான தீர்வாக அமைந்துள்ளது. பிரபல இருதய சிகிச்சை நிபுணர்கள் நாகராஜ் மற்றும் பெரியசாமி ஆகியோர் தலைமையிலான மருத்துவர் குழு, சர்வதேச தரத்தில், கேத் லேப் ஒன்றை அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது.

அவ்வகையில் இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமில்லை; ஐயாயிரம் உயிர்கள், ஐயாயிரம் குடும்பங்கள். அதை இந்த மருத்துவர் குழு காப்பாற்றி உள்ளது.

மாரடைப்பு ஏற்பட்ட 30 முதல் 40 நிமிடங்களுக்குள் உரிய சிகிச்சை அளித்தால், உயிரைக் காப்பாற்றும் உயர்தரமான, உலகத் தரமான வசதி இம்மருத்துவமனையில் உள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும், மருத்துவர் குழு செயல்படும். 15 படுக்கைகளுடன் அமைந்துள்ள அதிநவீன வெண்டிலேட்டர் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் உள்ளன. அனுபவமிக்க மருத்துவர் குழு இங்குள்ளது. மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில், விபத்து, தலைக்காயம், விஷ முறிவு, பக்கவாதம், வலிப்பு போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவை தவிர, எலும்பு முறிவு, மூட்டு மாற்று, தண்டுவட அறுவை சிகிச்சை, மகளிர் பிரிவு, மகப்பேறு மருத்துவம், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை; மூளை மற்றும் நரம்பியல் பிரிவு, பொது மருத்துவம், நீரழிவு, முதியோர் நலம், குழந்தைகள் சிகிச்சை, நுரையீரல், தோல் மற்றும் அழகியல் சிகிச்சை, மனநலம், போதை மறுவாழ்வு சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.

அனைத்து வித பரிசோதனைகளுக்கும் ஏற்ற துல்லிய மற்றும் விரைவான முடிவுகள் வழங்கும் நவீன லேப்கள்; ஆம்புலன்ஸ் வசதி ஆகியன உள்ளன. ரேவதி கல்வி நிறுவனங்களில் ஏராளமானோர் பயின்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us