ADDED : பிப் 02, 2024 12:52 AM

அவிநாசிலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் இன்று நடக்க உள்ளது.
அவிநாசியை சேர்ந்த அ.தி.மு.க., வினர் கோவில் அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் வெளியில் சென்றிருந்த நிலையில், அலுவலகத்தில் இருந்த பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஸ் வழங்குவதில் குளறுபடி, பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டினர். தொடர்ந்து, செயல் அலுவலர் இதை அச்சடிக்க வெளியில் சென்றுள்ளார் என்று கூறி சமாதானப்படுத்தினர்.


