ADDED : அக் 18, 2025 11:35 PM

வெள்ளகோவில்: வெள்ளகோவில் வட்டார அரசுப்பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் பெற்றோரை இழந்த அல்லது ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கும் திட்டம், பத்தாம் ஆண்டாக நடந்தது.
சிலம்பகவுண்டன்வலசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் தலைமை வகித்தார். 152 குழந்தைகளுக்கு அவரவர் அளவுக்கு ஏற்ப புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து பச்சாபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி துாய்மைப்பணியாளர் 20 பேருக்கு வேஷ்டி, சட்டை, சேலை வழங்கப்பட்டது.


