/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொரோனா சோதனை கிடையாது கவச உடைக்கு வேலை இல்லை கொரோனா சோதனை கிடையாது கவச உடைக்கு வேலை இல்லை
கொரோனா சோதனை கிடையாது கவச உடைக்கு வேலை இல்லை
கொரோனா சோதனை கிடையாது கவச உடைக்கு வேலை இல்லை
கொரோனா சோதனை கிடையாது கவச உடைக்கு வேலை இல்லை
ADDED : ஜூன் 20, 2025 02:09 AM
திருப்பூர் : தற்போது பரவி வருவது வீரியமற்ற கொரோனா என்பதுடன், பாதிப்புகள் குறைவு என்பதால், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு யாரும் பரிசோதனைக்கு வருவதில்லை.
நாடு முழுதும் மே மாத மூன்றாவது வாரத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. இணை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த நிலையில், தொற்று பாதித்த பலர் மீண்டு வந்தனர். பரவி வருவது வீரியமற்ற கொரோனா; இருப்பினும் முககவசம் அணிந்து கவனமுடன் மக்கள் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு பிரத்யேக மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், அவ்வளவாக கொரோனா பரிசோதனைகள் நடக்கவில்லை.
இது குறித்து, கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரியும் அலுவலர்கள் கூறுகையில், 'ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமெனில் 'பிபி கிட்' முழுகவச உடை அணிந்தே பரிசோதிக்க முடியும். அனைத்து ஏற்பாடு, வசதிகளும் மருத்துவ பணிகள் மற்றும் சுகாதாரத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பரிசோதனைக்கு யாரும் முன்வருவதில்லை. அறிகுறிகள் இருந்தால், டாக்டரை சந்திக்கின்றனர். மருந்து, மாத்திரை போதும் என கூறிவிடுகின்றனர். பரிசோதனை என்றாலே ஓட்டம் பிடித்து விடுகின்றனர். மருத்துவக்குழுவினர் முழு கவச உடைக்கு தற்போதைக்கு வேலை இல்லை என்ற நிலை உள்ளது,' என்றனர்.