/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புகையிலை தின விழிப்புணர்வு மக்களுக்கு நோட்டீஸ் வழங்கல் புகையிலை தின விழிப்புணர்வு மக்களுக்கு நோட்டீஸ் வழங்கல்
புகையிலை தின விழிப்புணர்வு மக்களுக்கு நோட்டீஸ் வழங்கல்
புகையிலை தின விழிப்புணர்வு மக்களுக்கு நோட்டீஸ் வழங்கல்
புகையிலை தின விழிப்புணர்வு மக்களுக்கு நோட்டீஸ் வழங்கல்
ADDED : ஜூன் 01, 2025 11:12 PM

உடுமலை : சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி உடுமலை ஆசாத் வீதி பிரம்ம குமாரிகள் தியான நிலையத்தில் நடந்தது.
உடுமலை, மடத்துக்குளம் அமைப்பின் பொறுப்பாளர் மீனா வரவேற்றார். உடுமலை தீயனைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், நகர வீதிகளில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் சிகரெட் போல வேடமிட்டும், பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.