/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அறிவிப்பு மட்டும் போதாது: அமல்படுத்துவது முக்கியம் நுகர்வோர் அமைப்பு யோசனை அறிவிப்பு மட்டும் போதாது: அமல்படுத்துவது முக்கியம் நுகர்வோர் அமைப்பு யோசனை
அறிவிப்பு மட்டும் போதாது: அமல்படுத்துவது முக்கியம் நுகர்வோர் அமைப்பு யோசனை
அறிவிப்பு மட்டும் போதாது: அமல்படுத்துவது முக்கியம் நுகர்வோர் அமைப்பு யோசனை
அறிவிப்பு மட்டும் போதாது: அமல்படுத்துவது முக்கியம் நுகர்வோர் அமைப்பு யோசனை
ADDED : செப் 25, 2025 12:13 AM

அவிநாசி, செப். 25-
'கிராம ஊராட்சிகளை ஒட்டிய நெடுஞ்சாலைகளில், குப்பை கொட்டுவதை தவிர்க்கும் அறிவிப்பை அமல் படுத்த வேண்டும்' என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலையில், ஆட்டையம்பாளையம் பகுதியில், சாலையோரம் முழுக்க குப்பை குவிந்து கிடந்தது; இதனால், சுகாதார கேடு ஏற்பட்டது. 'நெடுஞ்சாலையோரம் குப்பைக் கொட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்' என, திருமுருகன்பூண்டி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா, ஊராட்சிகளின் உதவி இயக்குனருக்கு மனு வழங்கியிருந்தார். மேலும், 'நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி நிர்வாகங்கள், சாலையோரங்களை குப்பைக் கொட்டும் இடமாக மாற்றக்கூடாது' என்ற கருத்தையும் முன்வைத்தார்.
அதே நேரம், ஆட்டையம்பாளையம் பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைக்குவியல் தொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழிலும் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, செம்பியநல்லுார் ஊராட்சி நிர்வாகம் சார்பில், குவிந்து கிடந்த குப்பை அகற்றப்பட்டு, அந்த இடம் முழுக்க சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 'குப்பைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்' என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.
'இதுபோன்ற அபராத அறிவிப்பை, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்தி விடாமல், குப்பைக் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்' என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.