Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மங்களம் பொங்கும் நன்னாளில் வித்யாரம்பம்;  'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

மங்களம் பொங்கும் நன்னாளில் வித்யாரம்பம்;  'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

மங்களம் பொங்கும் நன்னாளில் வித்யாரம்பம்;  'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

மங்களம் பொங்கும் நன்னாளில் வித்யாரம்பம்;  'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

ADDED : செப் 30, 2025 11:58 PM


Google News
திருப்பூர்; மங்களகரமான விஜயதசமி நாளில், 'தினமலர்' நாளிதழ், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில், 'வித்யாரம்பம்' நாளை நடைபெறுகிறது.

'வித்யாரம்பம்' என்பது, கல்வி அறிவின் துவக்கம்; நவராத்திரியை தொடர்ந்து வரும் வெற்றித்திருவிழாவாகிய, விஜய தசமி நாளில், குழந்தைகளுக்கு கற்றலை துவக்கி வைக்கும், 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மங்களகரமான விஜயதசமியான நாளை, இரண்டரை வயது முதல், மூன்றரை வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, கற்றறிந்த ஆன்றோர்கள், திருப்பூரின் வெற்றியாளர்கள், கல்வியாளர்கள் முன்னிலையில், ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. அவிநாசி அருகே ராக்கியாபாளையம் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், காலை, 9:00 முதல், 10:30 மணி வரை, குழந்தைகளுக்கான வித்யாரம்பம், நாளை நடக்கிறது.

ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்ந்து பயில, விஜயதசமி மாணவர் சேர்க்கைக்கு, 10 சதவீத சிறப்பு சலுகை வழங்கவும், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி முன்வந்துள்ளது.

சிறப்பு விருந்தினர்கள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில், திருப்பூர் ஸ்ரீசாரதா சத்சங்கம் சுவாமினி ஸ்ரீமஹாத்மானந்த சரஸ்வதி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், 'கிளாசிக் போலோ' நிர்வாக இயக்குனர் சிவராம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் டிரஸ்ட் ஞானகுரு, கோவை ஸ்ரீசக்தி கல்வி குழுங்களின் சேர்மன் தங்கவேல், ஆடிட்டர் ராமநாதன், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் தீபன் தங்கவேல் ஆகியோர், குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் செய்து வைக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us