ADDED : பிப் 12, 2024 12:50 AM
வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர், தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழியிடம் அளித்த மனு:
காங்கயம் - வெள்ளகோவில் கிளை வாய்க்கால்களுக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு உரிய தண்ணீர் மறுக்கப்படுகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்குக் கூட போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. செயற்கை வறட்சியை, பி.ஏ.பி., நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. கடந்த, ஐந்து ஆண்டுகளாக அறப்போராட்டம் நடத்தி வருகிறோம். கோர்ட் உத்தரவுகளையும் மீறி, பி.ஏ.பி., பிரதான கால்வாய்களில், தண்ணீர் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. அதிகாரிகள் பங்களிப்புடன், தண்ணீர் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. தண்ணீர் திருட்டை தடுத்து, விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.