/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பொங்கி வழியும் கழிவுநீர் சுகாதார சீர்கேடு அபாயம் பொங்கி வழியும் கழிவுநீர் சுகாதார சீர்கேடு அபாயம்
பொங்கி வழியும் கழிவுநீர் சுகாதார சீர்கேடு அபாயம்
பொங்கி வழியும் கழிவுநீர் சுகாதார சீர்கேடு அபாயம்
பொங்கி வழியும் கழிவுநீர் சுகாதார சீர்கேடு அபாயம்
ADDED : செப் 24, 2025 11:54 PM

திருப்பூர்: நொய்யல் கரை ரோட்டில், பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் பொங்கி வழிந்து ரோட்டில் பாய்கிறது.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரைகளிலும் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நொய்யல் ஆற்றில் சென்று கலக்கும் ஓடைகள் வழியாக வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து, நொய்யலில் திறந்து விடும் வகையில் பணி திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், பெரியாண்டிபாளையம் ரிங் ரோட்டில், அணைப் பாளையம் பாலம் பகுதியில் துவங்கும் வடிகால் பணிக்காக, கரையோரம் குழாய் பதித்து, சுத்தி கரிப்பு மையத்துக்கு வரும் வகையில், புதை வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எஸ்.ஆர். நகர் பகுதியை கடந்து செல்லும் இடத்தில் இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் சென்று பாய்கிறது.
நொய்யல் கரையை ஒட்டி அமைந்திருந்தாலும், இந்த கழிவுநீர் ரோட்டில் தான் பாய்கிறது. நொய்யலை ஒட்டி, மின் விளக்கு கம்பம் பதித்து, அவற்றுக்கு கேபிள் பதிக்கும் பணிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது.
வடிகாலிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றினுள் செல்ல வழியின்றி எதிர்பகுதியில் ரோட்டில் வழிந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, உடனடியாக புதை வடிகால் அடைப்பு சீரமைக்க வேண்டும்.