தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு

 துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு

 துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு


ADDED : மார் 10, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.), 82 பேர் அடங்கிய இரு கம்பெனி நேற்று முன்தினம் ரயில் வாயிலாக திருப்பூர் வந்தனர். அவர்களை வரவேற்ற மாநகர போலீசார் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

இந்நிலையில், மாநகர பகுதியில் உள்ள பதற்றமான இடங்கள், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு, இதற்கு முன் கலவரம் நடந்த இடங்கள் உள்ளிட்ட விபரங்களை துணை ராணுவத்தினர் பெற்றனர். தொடர்ந்து, ஸ்டேஷன் வாரியாக குழுக்களாக பிரிந்து அப்பகுதியில் முக்கிய இடங்களில் கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் இருக்க, மக்களின் பயத்தை போக்கும் வகையில் கொடி அணி வகுப்பு நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us